கோயம்புத்தூர் அக், 15
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக தமிழ் கூட்டியக்கம், கோயமுத்தூர் தமிழ் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் ஆகிய தமிழ் அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், உலக தமிழ் கூட்டியக்க ஒருங்கிணைப் பாளருமான சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக கோஷமிட்டனர்.