கீழக்கரை அக், 11
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் என்று பதாகைகளோடு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் இணைந்து நடத்திய சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெற்றது.
அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மனித சங்கிலியில் கீழக்கரையில் இருந்து பல்வேறு கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்தி பிரிவு.