ராமநாதபுரம் அக், 11
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பசும்பொன் வரவுள்ளதாக வேகமாக தகவல் பரவி வரும் நிலையில், தமிழக பாஜகவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதனிடையே முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை கவனித்து வருகிறது.