சென்னை அக், 10
நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய் மூலமாக அம்மாவான நயன், நிறைய சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள். வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்வது இந்தியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, கணவனோ, மனைவியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் குறை இருக்கும் பட்சத்தில், திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகே வாடகைத் தாயை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும், கடந்த ஜனவரி மாதமே வாடகை தாய் மூலமாக குழந்தையைப் பெற்றெடுக்க இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன் பின்னரே நயன் – விக்கி ஜோடி திருமணம் நடந்தேறியது.