Spread the love

மதுரை அக், 10

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம்-மதுரை இடையே பகல் நேரத்தில் வாரம் மும்முறை ஒரு வழி சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த சிறப்பு கட்டண ரயில் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு வழக்கமான கட்டணத்தை விட, 1.3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ரயில், வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மதுரை கோட்ட மேலாளர் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ஓரளவு கட்டணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *