அரியலூர் அக், 10
ஜெயங்கொண்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலைய கட்டிடம் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இங்கு கழிவறை வசதி இல்லை. இதனால் முதியவர்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே கழிவறை அமைக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் உள்ள இடியும் நிலையில் உள்ள பழைய பஸ் நிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் 2 சக்கர வாகன காப்பகமும், நவீன இலவச கழிப்பிட வசதியும் அமைத்து தரக்கோரி பயணிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.