புதுடெல்லி அக், 9
கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் தனது 46வது வயதில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம்தேதி மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில், அவர் நடிப்பில் உருவாகிய ‘கந்தாட குடி’ திரைப்படம் வரும் அக்டோபர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைய்லரை பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரில் சேர்ந்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து கொள்ள விரும்பினார் என்று புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் டுவிட்டரில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து நடிகர் புனித் ராஜ்குமார் இருக்கும் படங்களையும் வெளியிட்டார்.