அரியலூர் ஆகஸ்ட் 4,
அரியலூரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பவுண்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 அடி உயரமுள்ள தென்னை மரம் நேற்று சாய்ந்து கீழே விழுந்தது. மேலும் அருகே இருந்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் சாலையில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பின்பு பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு தென்னை மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
#Vanakambharatham#heavyrain#news