திருப்பத்தூர் அக், 8
ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னவேப்பம்பட்டு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து கலந்திரா ஊராட்சியில் ரூ.1.53 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், முருகேசன், வேளாண்மை அலுவலர் ராதா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.