புதுச்சேரி அக், 6
புதுச்சேரிக்கு வருகை புரிந்த நார்வே கடல் ஆராய்ச்சி நிறுவனம், நார்வே சுற்றுச்சூழல் முகமை, நார்வே தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் எரிக் ஒல்சன் தலைமையிலான குழுவினரை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வணிகவரித்துறை அலுவலக கருத்தரங்க கூட்டத்தில் சந்தித்து பேசினார்.
இந்நிகழ்வில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர்வல்லவன், அரசுச் செயலர் முத்தம்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் முதுநிலை சுற்றுச்சூழல் பொறியியல் அதிகாரி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.