Spread the love

திருவனந்தபுரம் அக், 6

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த அரசு பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர் என்றும், மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

மேலும் காயமடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *