துபாய் அக், 5
ஐக்கிய அரபு அமீரகத்தில் சகிப்புத்தன்மை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை பேணும் துபாயில் பல்வேறு மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு துபாய் பிரேயர்ஸ் வில்லேஜ் என்று அழைக்கப்படும் இடத்தில் புதிய இந்து கோவிலை அமைச்சர் சேக் முபாரக் பின் அல் நஹ்யான் வழிபாடுகளுக்காக அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
மேலும் கோயில் திறக்கப்பட்ட போது, பலர் கோயிலில் வழிபாடு நடத்தினர். அரேபிய மற்றும் இந்து கலாச்சார முறைப்படி தூண்கள் அமைக்கப்பட்ட வெள்ளை மார்பிள் மூலம் கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பை பலர் பார்வையிட்டனர். கோயிலுக்கு வார இறுதி நட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வர உள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை உறுதிபடுத்தவும் கியூஆர் கோடு முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய இந்து கோயிலானது மாலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் பூஜை செய்வதற்கு திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 1200 பேர் வரை சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.