புதுடெல்லி அக், 4
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்குப் பின்பு டெலிகாம் துறை பெரிய அளவில் மாறியுள்ளது, 3ஜி சேவைக்காக அல்லாடிக்கொண்டு இருக்க மக்களுக்கு 4ஜி சேவை மிகவும் எளிதாக அதே நேரம் மலிவான விலையும் கிடைத்தது. இந்த நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 5ஜி சேவை அளிப்பதற்கான பணிகளை வேக வேகமாகச் செய்து வரும் நிலையில், தற்போது அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவை அறிமுகம் செய்வதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது, இதற்காக டிசிஎஸ் நிறுவனத்துடன் 16000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கையெழுத்திட உள்ளது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் முதல் 4ஜி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீண்டும் லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதற்காகப் பெரும் தொகையை ஒதுக்கப்பட்டு இருக்கும் வேளையில் 4ஜி சேவையை வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 5ஜி சேவை வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பி.எஸ்.என்.எல் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பிகே புர்வார் இதேபோல் அடுத்த 18 மாதத்திற்குள் பிஎஸ்என்எல் சுமார் 1.25 மொபைல் சைட்களில் 4ஜி சேவை அளிக்கத் திட்டமிட்டு உள்ளோம் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் புர்வார் தெரிவித்துள்ளார். இதேபோல் ஆகஸ்ட் 15, 2023க்குள் டெலிகாம் துறை அமைச்சர் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.