திருவண்ணாமலை அக், 3
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற காந்தியின் பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.