கடலூர் அக், 1
கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ஜவுளி ரகங்களை பார்வையிட்டார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி முன்னிலை வகித்தார். இதில் கடலூர் விற்பனை நிலைய மேலாளர் விமல்ராஜ் மற்றும் விற்பனை நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை படிக்க..