புது டெல்லி செப், 28
இந்தியா முழுவதும் இதுவரை பல்வேறு தொழில் நிறுவனங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி பல நூறு கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் முறை கேடுகளில் அன்றாடம் ஈடுபடும் தொழிலதிபர்கள் குறித்து விசாரித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் தொழிலதிபர்கள் குறித்தும் அவர்களது சொத்து விவரங்களை அமலாக்க துறையினர் சேகரித்து வருவதாகவும் மேலும் வெளிநாடுகள் மற்றும் தமிழகத்தில் முழுவதும் பினாமி பெயரில் சொத்து சேர்த்து வைத்துள்ளனரா மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி வழங்குகின்றனரா என்று ரகசிய விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் இருந்த தென் தமிழகத்தை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தொழிலதிபர்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் சட்ட விரோதமாக செய்யப்படும் பண பரிமாற்றங்கள் தடுக்கப்பட்டு ஹவாலாவில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
மேலும் சட்ட விரோதமாக சொத்து சேர்த்து திடீர் பணக்காரர்கள் ஆன தொழில் அதிபர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என சட்டத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.