துபாய் செப், 27
ஐக்கிய அரபு அமீரக துபாயில் சர்வதேச வர்த்தக அமைப்பின் (IBG) முதல் வணிக ஆலோசனை மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் அமைப்பின் தலைவர் அன்வர்அலி தலைமையில் துபாய் ஏர்போட் சாலையில் உள்ள புளோரா நட்சித்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் சிறப்புவிருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த துபாய் வணிகத்துறையை அதிகாரி வலீத் அப்துல் மாலிக், அமீரகத்தை சேர்ந்த இன்டர்நேஷனல் ரெப்ரி மேஜர் உமர் முஹம்மது ஜுபைர், துபாய் ஏர்போர்ட் பாஸ்போர்ட் கன்ட்ரோல் உமர் அலி அப்துல்லா மற்றும் இந்திய தூதரக அதிகாரி காளிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக அமீரக வாழ் தமிழ் முன்னனி தொழிலதிபர்களான பி.எஸ்.எம் ஹோல்டரிங்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குனருமான பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான், அல் அய்டு மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ஏ.ஜே. கமால், பவர் குரூப் ஜாஹிர் ஹுசைன், ரேடியேண்ட் ஸ்டார் நிறுவன தலைவர் ஆபித் ஜுனைத், பிளாக் துளிப் நிறுவனர் யஹ்யா, துபாய் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசீன், ஸ்டார் பிரியாணி நிர்வாகி வெங்கட், பி.எம். குரூப் நிறுவனரும் ரேடியோ கில்லி 106.5 FM நிர்வாக இயக்குனர் கனகராஜ், அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கே.வி.எல் கமால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் அழகான இயற்கை செடிகளை பரிசளித்து இயற்கையும் அன்பையும் வெளிக்கொணர்ந்த பிளாக் துளிப் நிறுவனருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக முதல் வணிக கூட்டத்தை வெற்றிக்கரமாக நடத்துவதற்காக உறுதுணையாக இருந்த அணைத்து நிர்வாகிகளுக்கும் அதன் தலைவர் அன்வர் அலி மற்றும் அமைப்பின் நிர்வாகி ஷாநவாஸ் நன்றி தெரிவித்து கொண்டனர்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.