ராமநாதபுரம் செப், 27
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவின் முதல் மாடியில் இடதுபுறமும் அறுவை சிகிச்சை அரங்கமும் வலதுபுறம் குழந்தைகள் பாடும் அமைந்துள்ளன இந்த அறுவை சிகிச்சை அரங்கம் தற்போது மருத்துவ மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் செயல்படுகிறது அறுவை சிகிச்சை அரங்கத்தில் நேற்று மாலை தீப்பற்றி எரிந்தது.
ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் இருந்து தீப்பற்றி அங்கிருந்த இருக்கைகள் பற்றி எரிந்தன. தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து அப்பகுதியில் தண்ணீரை பீச்சி அடித்து கரும் புகையை வெளியேற்றினர். அப்போது குழந்தைகள் பாடல் இருந்த 31 குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த பெற்றோர் அருகில் இருந்த வார்டுக்கு மாற்றப்பட்டனர். குளிர்சாதனைப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி உள்ளது இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்