சென்னை செப், 26
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலக்குறைவால் காலமான அவரது தாயார் பிரேமா சீனிவாசன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வேலு ஆகியோர் உள்ளனர்.