துபாய் செப், 22
தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியை போக்குவது நேரடியாக இறைவனின் ஆசிர்வாதத்தை பெரும் செயலாகும். இதனை கருத்தில் கொண்டு, யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச ரொட்டி அளிக்கும் பென்டிங் இயந்திரங்களை நிறுவியுள்ளது அந்நாட்டு அரசு.
மேலும் துபாயில் பணிபுரிவோர் பலர் மூன்று வேளையும் சாப்பிடாமல் பணிபுரிந்து வருவதால் அந்நாட்டு பிரதமர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல்மக்தூம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டம் அந்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் பிரதமருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.