கடலூர் செப், 20
விஜயதசமி எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கொலு பொம்மைகள் அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவை கடலூர் மாவட்ட மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
மேலும் நவராத்திரி அன்று தங்கள் வீடுகளில் 9 படிகளில் பல விதமான சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலு. இதில் கிருஷ்ணர், முருகன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமிகளின் பொம்மைகள் வைக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, நவராத்திரி விழாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொம்மைகளுக்கு இறுதி வர்ணம் பூசும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தயார் செய்யப்பட்ட பொம்மைகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிப்பாளையத்திலும் நவராத்திரி கொலு பொம்மைகள் 3 தலைமுறைகளாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதை குடிசை தொழிலாக 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.