கள்ளக்குறிச்சி செப், 13
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது.
இதில் ஆட்சியர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, உதவி ஆணையர் ராஜவேல், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.