கள்ளக்குறிச்சி செப், 11
சங்கராபுரம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதுநிலை உதவியாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ஜோதிபாசு வரவேற்றார். முகாமில் நகல் அட்டை தொடர்பாக 18 மனுக்கள், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், மொபைல் எண் மாற்றம், அங்கீகாரச் சான்று, குடும்ப தலைவர் மாற்றம் உள்பட மொத்தம் 69 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.