திருப்பூர் செப், 12
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், தனியார் மண்டபத்தில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அதேபோல், வெள்ளக்கோவிலில் 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.
மேலும் காங்கேயம் பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்க இயக்குநர் லட்சுமணன் தலைமை வகித்தார். செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1000ம், மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கினார்.