Spread the love

துபாய் செப், 11

நிலவின் மேற்பரப்பு போன்ற தோற்றத்துடன் ரம்மியான வடிவமைப்புடன் இந்த சொகுசு விடுதி கட்டப்பட்ட உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரம் துபாய். வானாளவிய கட்டிடங்களுடன் பிரம்மிப்புக்கு பெயர் போன இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக புது புது யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் துபாயில் நிலா வடிவில் பிரம்மாண்டமான சொகுசு விடுதி ஒன்று கட்டப்பட உள்ளது.

இதற்கான வடிவமைப்பு மட்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டை சேர்ந்த மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் செய்ய உள்ளது. 48 மாதங்களில் இதன் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. சுமார் 735 அடி உயரத்தில் இந்த சொகுசு விடுதி அமைக்கிறது. இதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய மதிப்பில் 39 ஆயிரத்து 838 கோடி ரூபாய் ஆகும். 10 ஏக்கரில் அமையவுள்ள நிலா வடிவமைப்பை கொண்ட விடுதியில் வெல்னஸ் சென்டர், இரவு விடுதிகள்,, 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், ஓட்டல் அறைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. இந்த விடுதி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் வருவார்கள் என்றும் இதன்மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *