கடலூர் செப், 11
கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல், ஓட்டுனர். இவர் காரில் பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி வந்தார். அண்ணா பாலம் அருகில் வந்த போது, அங்கு சாலையோரம் இருந்த சிக்னல் கம்பம் திடீரென சாய்ந்து காரின் முன்பகுதியில் விழுந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்த முத்துவேல், உடனே காரை நிறுத்தினார். இருப்பினும் சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த முத்துவேல் உள்ளிட்ட 2 பேரும் காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும் கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.