ராமநாதபுரம் செப், 8
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் டாம்கோ மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் டாப் செட்கோ மூலம் தனிநபர் கடன் திட்டம் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம் மற்றும் கல்விக் கடன் ஆகிய திட்டங்களின் கீழ் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நாளை காலை 10:20 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடைபெறுகிறது.
இதில் சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் ஆகியோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் நடைபெறுகிறது. சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்கள் கலந்து கொண்டு கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதார அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் குறித்த விபரம் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இராமநாதபுரம் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.