Spread the love

சென்னை செப், 8

புழல் அடுத்த கதிர்வேடு ரங்கா அவென்யூ இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் பார்த்தீபன் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் வசிக்கிற தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்பு 3 நாட்கள் கழித்து தனது ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது பூட்டிய தனது வீட்டின் கிரில் கேட்டும் மெயின் கதவு உடைக்கப்பட்டு, வாசல் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 78 சவரன் நகை, 30 ஆயிரம் பணம் காணாமல் போய் உள்ளதை கண்டறிந்தார்.

இதுகுறித்து உடனடியாக புழல் காவல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் திருட்டு சமபவம் நடந்த இடத்திற்கு கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் புழல் சரக உதவி ஆணையர் ஆதிமூலம்,

புழல் குற்றபிரிவு காவல் ஆய்வாளர் விஜய பாஸ்கர்

மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்காளம் பீர்கும் மாவட்டம் கிளோரா கிராமத்தை சேர்ந்த சாலும்சேக் என்பவரது மகன் கமல்சேக் 19 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது அவரிடமிருந்த 78 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து குற்றவாளியான கமல்ஷேக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு தனிப்படை காவல்துறையினரை உயர் காவல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார். மேலும் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ராஜாராம் பதவியேற்றது முதல் இதேபோல் புழல் பகுதியில் திருடு போன 40 சவரன் நகையை பறிமுதல் செய்து ஒப்படைத்த நிகழ்வு மட்டுமல்லாது தற்போது குற்றம் நடந்த சிலநாட்களில் வடமாநிலத்திற்கு சென்று நகைகளை மீட்டெடுத்தது உரியவர்களுக்கு ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களிடத்தில் காவல்துறையினர் மீது மிகுந்த நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *