திருப்பூர் செப், 7
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி வருகிற 9 ம் தேதி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை வயது சான்றிதழுடன் வருகிற 9 ம்தேதி காலை 6 மணிக்கு போட்டி நடக்கும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.