மும்பை செப், 6
பாலிவுட் நடிகை தபு இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தபு நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டே, சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தபு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
எனக்கு எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகாமலே கர்ப்பம் ஆகலாம். வாடகைத் தாய் மூலமாகவும் தாயாகும் வாய்ப்பு உள்ளது. எனக்கு தாயாக வேண்டும் என தோன்றினால் அந்த முறையை நான் கடைபிடிப்பேன்.என்னை யாராலும் தடுக்க முடியாது.
மேலும் திருமணத்திற்கும் குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் வயது சம்பந்தமில்லை. இந்த காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல” என கூறியுள்ளார். தபுவின் கருத்து வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது