ராமநாதபுரம் செப், 5
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி கரையரங்கில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் திட்டம் வழங்கினார்.
உடன் மாவட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன் ஆகியோர் உள்ளனர்.