சென்னை செப், 5
தமிழக அரசின் விருது தமிழக அரசின் விருது வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ் விழாவில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சாமிநாதன் ஆகியோர் விருதுகளை வழங்கி வருகின்றனர்.
இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர். விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை விக்ரம் பெற்றுக்கொண்டார். அதே போல ராஜா ராணி படத்தில் நடித்த ஆர்யா, சித்தார்த் எனபலர் விருதை பெற்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.