சென்னை ஜூலை, 27
தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார். அதில், 2024-25-ம் ஆண்டிற்கான நிலுவையிலுள்ள ₹2,151 கோடி பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.