துபாய் ஜூன், 24
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை இன்று ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. துபாய், தோஹா, பஹ்ரைன், அபுதாபி, குவைத், மதினா, ஜெட்டா, மஸ்கட், ஷார்ஜா, ரியாத், டிபிள்ஸி ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்படாது என கூறியுள்ளது. இதனால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துவதாகவும் இண்டிகோ கூறியுள்ளது.