சென்னை ஜூன், 6
2026 தேர்தலுக்கு பிறகு சிம்புவை வைத்து திரைப்படம் இயக்குவேன் என சீமான் தெரிவித்துள்ளார். தந்தி பாட்காஸ்டில் சீமானிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்ட போது தனக்கு சிம்பு மீது மிகப்பெரிய அன்பு உண்டு என்றார். சிம்புவால் பெரிய உச்சத்துக்கு செல்ல முடியும் என்றும் ஆனால் அவர் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் என்றார். விஜய்க்கு எழுதிய ‘பகலவன்’ கதையில் விரைவில் சிம்புவை இயக்குவேன் என்றார்.