சென்னை ஜூன், 1
அரசுப் பள்ளிகள் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால் சொந்த ஊர் சென்ற மாணவர்கள், சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு டிக்கெட் கட்டணம் ₹4,000 வரையும், நெல்லையில் இருந்து சென்னைக்கு ₹5,000 வரையும் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.