அருணாச்சல பிரதேசம் ஜூன், 1
அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர், மிசோரம் மாநிலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.