சென்னை மே, 25
ரேஷன் கடைகளில் இனி சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும்.
இதற்காக பில் போடும் இயந்திரத்துடன் மின்தராசு இணைக்கப்பட்டுள்ளது. அந்த எலக்ட்ரானிக் பில்லிங் கருவியில் ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது வரும். அதாவது இனி பொருட்கள் எடை எந்தளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குதான் பில்லும் வரும். இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் சரியான எடைக்கு பொருட்களை வைத்தே ஆக வேண்டும்.