ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்குள் வரும் லோடு ஆட்டோ கார் மற்றும் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி உட்பட ரூபாய் 30 மட்டும் வசூல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் குத்தகை எடுத்துள்ள ஒப்பந்ததாரரின் குத்தகை வசூல் செய்பவர் அதில் தனியாக 50 என்று எழுதி சாலையோர பழ வியாபாரியிடம் வசூலித்துள்ளார்.அதில் வசூல் செய்யும் தேதியும் போடுவதில்லை.
மேலும் 30 ரூபாய் ரசீதுக்கு 50 ரூபாய் வசூலிப்பது என்ன நியாயம்னு? பழ வியாபாரி கேட்டபோது, வசூல்தாரர் அவரை மரியாதை குறைவாக பேசி உள்ளார்.
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளபோது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் மாநில மீனவர் அணி பொதுச் செயலாளர் மனாஸ் வசூல்தாரரின் பகல் கொள்ளையை தட்டி கேட்டுள்ளார். குத்தகை வசூல் செய்பவர் அவரையும் மரியாதை இல்லாமல் நீ யார் என்னிடம் கேட்பதற்கு என்று ஒருமையில் பேசி உள்ளார்.
இதைனையடுத்து மீண்டும் வாக்குவாதம் முற்றி சம்பந்தப்பட்ட குத்தகைதாரரின் கொள்ளை வசூல் குறித்து கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போது ரூபாய் 30 மட்டுமே வசூல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களை விசாரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நகராட்சி குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் அதிக வசூல் செய்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.