ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை கடிக்க துரத்தி உள்ளது.
நாய் கடியில் இருந்து தப்பிக்க முதியவர் ஓடியுள்ளார். அப்போது நிலைகுலைந்து கீழே விழுந்து பிடரியில் அடிபட்டு ரத்தக்காயத்துடன் அவரை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து பலரையும் கடிக்க துரத்தும் இந்த நாய் குறித்து பலமுறை அங்கு உள்ள கவுன்சிலரிடம் புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் செல்லக்கூடிய பகுதியாக உள்ளதால் கீழக்கரை நகராட்சி உடனடியாக அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை விரைவாக அப்புறப்படுத்துமாறு கீழக்கரை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்