திமுக மூத்த தலைவரும், பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனுமான கே.எஸ்.தங்கபாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக பாளையங்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.