ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா
புது தில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி பரமக்குடி இணைந்து நடத்தும் 39 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி தொடங்கியது.
தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருத்தாளர், எழுத்தாளர்
நீ.சு.பெருமாள் தலைமையில், ஆயிர வைசிய சபையின் தலைவர்
.ராசி N போஸ் மற்றும் இணைத் தலைவர்
S. பாலுச்சாமி முன்னிலையில்,பரமக்குடி வட்டாட்சியர் திரு.எஸ்.கே.வரதன்
புத்தகக் கண்காட்சியை
திறந்து வைத்தார்.
ஆயிர வைசிய மேல் நிலைப் பள்ளியின் செயலாளர் S.K.P இலெனின்குமார்
முதல் விற்பனையைத் துவக்கி வைக்க ஆயிர வைசிய மேல் நிலைப் பள்ளியின் பொருளாளர் S.R.சதிஷ் குமார் முதல் விற்பனையைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் இவ்விழாவில், மக்கள் நூலகம் தலைவர் எஸ் சந்தியாகு செயலாளர் சி பசுமலை வழக்கறிஞர் இராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எம் அப்துல் அஜீஸ் ,பேராசிரியர் இதயதுல்லா, வானொலிப் பேச்சாளர் டி என் ராஜாராமன், பூபாலன் தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற பொறுப்பாளர்கள்
கே ஆர் ரவீந்திரன், எல் எஸ் ரங்கச்சாரி கே ஆர் சுப்பிரமணியன் மற்றும்,ஆசிரியர்கள்,கலை இலக்கியப் பெருமன்ற தோழர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்