ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும்,தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி SDPI கட்சி சார்பில் நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் நகர் தலைவர் அப்துல் ஜலீல் தலைமை வகித்தார்.நகர் செயலாளர் நதீர் வரவேற்றார்.
மாவட்ட துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி கண்டன உரையாற்றினார்.இணை செயலாளர் ஹமீது பைசல் நன்றி கூறினார்.
மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.