Spread the love

திருவாடானை மே, 8

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெறுவாகோட்டை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் (பெயர் வெளியீட விரும்பவில்லை) தனக்கு சொந்தமான இடத்தை அளப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ. 4000/- ம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதில் ரூ. 500/-ஐ குறைத்து மேற்படி ரூ. 1000/- ஐ முன்பணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் பெற்றுள்ளார்.

மேற்படி மீதம் உள்ள ரூ. 2500/-ஐ இன்று லஞ்சமாக வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது 31/25 மற்றும் கிராம உதவியாளர் சித்ரா 48/25 ஆகியோர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினார்கள்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *