வீடியோ காலின் ஆரம்பமான Skype தள சேவை நாளை முதல் (மே 5) முற்றிலும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003-ல் 4 சாஃப்ட்வேர் இன்ஜினியர்களால் உருவாக்கப்பட்ட Skype-ஐ 2011-ல் 8.5 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாஃப்ட் வாங்கியது. பிப்., 2023 நிலவரப்படி 30.6 கோடி பேர் நாள்தோறும் Skype தளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், Skype மூடுவிழா காண்பதால் பயனர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.