சென்னை ஏப், 18
பிரபல தொழிலதிபரான சுப்பையா வி ஷெட்டி (92) மாரடைப்பால் காலமானார். கர்நாடகாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள ராமகிருஷ்ணா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், உடுப்பி ஹோட்டல்கள் தொடங்கி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு பல லட்சம் பேருக்கு கல்வி உதவியை செய்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.