கீழக்கரை ஏப்,18
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் லெப்பை டீ கடை அருகில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமை வகிக்க கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர் சூர்யகலா முன்னிலை வகித்தார்.
வெங்கடேஷ், அப்பாஸ் அலி ஆலிம், ராஜ்குமார், முஹம்மது ஃபரூஸ், சீனி முகம்மது தம்பி ஆகியோர் கண்டன உரை கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, தூத்துக்குடி சம்சுதீன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
கீழக்கரை SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜமாத் பிரமுகர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி முடிவில் ஷ்யாம் விக்டர் நன்றி கூறினார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.