தமிழக அரசின் ஆவின் பாலகம் மூலம் விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு கலர் 500 மில்லி பால் பாக்கெட்டின் MRP விலை 30 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது.
ஆனால் சில்லறை விற்பனையாளர்கள் MRP விலைக்கு மேல் மூன்று ரூபாய் கூடுதலாக வைத்து 33 ரூபாய்க்கு விற்கின்றனர்.
இதுகுறித்து மொத்த விற்பனையாளர் ஒருவரிடம் விசாரித்த போது அரசு எங்களுக்கு தருவதே 30 ரூபாய்க்கு தான்.அதில் நாங்கள் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து சில்லறை விற்பனையாளர்களுக்கு கொடுக்கின்றோம்.
சில்லறை விற்பனையாளர்கள் 31 க்கு மேல் கூடுதலாக இரண்டு ரூபாய் வைத்து 33க்கு விற்பனை செய்வதாக கூறினார்.எந்தவொரு பொருளும் MRP விலையை விட குறைவாக விற்கப்படும் காலத்தில் ஆவின் பால் மட்டும் MRP விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறைகேட்டுக்கு தமிழக அரசின் ஆவின் பால்வளத்துறை காரணமா? அல்லது மொத்த விற்பனையாளர்கள் காரணமா?அல்லது சில்லறை விற்பனையாளர்கள் காரணமா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக திராவிட மாடல் அரசுக்கு உள்ளது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்