சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முன்னாள் உதவி சேர்மன் ஹாஜா முகைதீன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
போதைப் பொருள் உளவுப்பிரிவு காவல் துறையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலில், சென்னை பரங்கிமலை பகுதியில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள், கொகைன் போதைப்பொருளை ரகசிய விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று வந்தது. உடனடியாக, போதைப்பொருள் தடுப்பு படை காவல்துறையினர், அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கொகைன் போதைப்பொருள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 கோடி மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப் பட்டது. அவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில், கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்தும் கிலோ கணக்கில் கொகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பில் ரூ.6 கோடி ஆகும். கைதான 8 பேர் பெயர் விவரம் வருமாறு:-
1.மகேந்திரன்,2. பாண்டி. 3.பழனீஸ்வரன், 4.காசிம், 5. முகமது முபாரக்,
6.எட்வட் சாம்,7.முகமது இதிரீஸ், 8.ஹாஜா முகைதீன்(முன்னாள் சேர்மன் கீழக்கரை). இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கைதான மகேந்திரன் வனத்துறை ஊழியர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஹாங்கிர் ஆருஸி.
மாவட்ட நிருபர்