2026 தேர்தலுக்காக TVK தீவிரமாக தயாராகி வருகிறது. முதல் தேர்தல் என்பதால் புது வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு முக்கியமானது என்பதால் அவர்களை குறிவைத்து பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக பெண் ரசிகர்களை வாக்காளர்களாக மாற்ற விஜய் செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வாக்கு சேகரிக்க திட்டம் தீட்டி அதற்கான பணிகள் நடக்கிறது.